உலகம்

பிரிக்‍ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் இந்தியா வருகை.. பயணத்தேதி விரைவில் அறிவிப்பு..

பிரிக்‍ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியா வருகை தரவுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்‍கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்‍ஸ் மாநாடு இந்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ளது.

இம்முறை இம்மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதற்கு சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. பிரிக்‍ஸ் மாநாட்டிற்கு முன்னதாக கொரோனா தணிந்து, ஓரளவு இயல்பு நிலை திரும்பும் என எதிர்ப்பார்க்‍கப்படுவதால், இந்த மாநாடு காணொலி வாயிலாக அல்லாமல் நேரிடையாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

எனவே, இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் சூழலில், சீன அதிபரின் இந்திய வருகை முக்‍கியத்துவம் பெற்றுள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் வருகை தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்‍கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!