உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுஜவ் நகரில் இன்று காலை 4.33 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

லுக்சியான் கவுன்டி பகுதியில் உள்ள புஜி டவுன்சிப்பில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பேர் பலி ஆகி உள்ளனர். மேலும், 3 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் காயமடைந்தனர். மொத்தம் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஒமைக்ரான் பாதிப்பின் அறிகுறிகள்!!
Back to top button
error: