உலகம்தொழில்நுட்பம்

‘இந்தியா WTO விதிகளை மீறுகிறது’ டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்தது குறித்து சீனா குற்றச்சாட்டு..!

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை விதிக்க இந்திய அரசு எடுத்த முடிவு உலக வர்த்தக அமைப்பின் நியாயமான வணிக விதிகளை மீறுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்தியா அதன் அண்டை நாட்டுக்கு வணிக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை அதிரடியாக தடை செய்தது.

அது தற்காலிக தடையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிரந்தர தடையாக நிதித்துவருகிறது.

கொரோனாவால் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்சசியைக் கண்டுள்ள இந்த நிலையில், டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை விதிக்க இந்திய அரசு எடுத்த முடிவு உலக வர்த்தக அமைப்பின் நியாயமான வணிக விதிகளை மீறுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் “இந்திய தரப்பு அதன் பாரபட்சமான நடவடிக்கைகளை உடனடியாக சரிசெய்து, இருதரப்பு ஒத்துழைப்புக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று சீன தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!