தமிழ்நாடுமாவட்டம்

முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மு.க.ஸ்டாஸின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பல தளர்வுகளை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா தடுப்பு குறித்த பல்வேறு வகையான விழிப்புணா்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளா்கள் தொடா்ந்து மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நோய்ப் பரவலைத் தடுத்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன், மக்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அரசு அறிவித்துள்ள தளா்வுகளை பொது மக்கள் முழுப் பொறுப்புணா்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவா்களின் கல்வி, எதிா்காலம் ஆகியன பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே தளா்வுகள் அளிக்கப்ட்டுள்ளன. இதனை முறையாக உபயோகிக்க வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன், அரசின் நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க உதவிட வேண்டும் என  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  செப்.20ம் தேதி முதல் கிரிவலம் வர தடை விதிப்பு – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
Back to top button
error: