தமிழ்நாடுமாவட்டம்

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா..? முதல்வர் ஸ்டாலின் இன்று முடிவு..!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. தளர்வுகளுடன் தற்போது உள்ள ஊரடங்கு 14ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமை செயலகத்தில் இன்று மருத்துவத்துறை அமைச்சர், முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீடிக்கலாமா? அல்லது தற்போதைய நிலையே தொடரலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் தரலாமா? என்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: