தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட பா.ஜ உடனான கூட்டணி தொடரும் -முதலமைச்சர் உரை..!

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் மற்றும் சில அமைச்சர் ஆகியோருடன் கலந்துக்கொண்டார். அந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்களால் நிலத்தடி நீர் மட்டம் உயரம் மற்றும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவின் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.

விழாவில் பங்கேற்பு

இன்று மதியம் 2 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தார். அவரை தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் பா.ஜ. க தலைவர் மற்றும் சில தொண்டர்கள் அவரை வரவேற்றனர். இன்று அமித் ஷா தமிழகத்தில் புதிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக சென்னை வந்தார். அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்களில் நடைபெற்று வருகிறது.

edapadi palanisami1 1

அதில் மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கலந்துக்கொண்டனர். அதில் தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வர் சிறப்பு பரிசை அமித் ஷாவிற்கு வழங்கினர். பின்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பழனிசாமி உரை

பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்நிகழ்ச்சியில் உரை ஒன்றை வாசித்தார். அதில் அவிநாசி சாலையில் உயர்மட்ட சாலை திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் தமிழகத்திற்கான முக்கிய நதி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழகம் நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக திகழ்வதால் மேலும் புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்ந்த முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.

edapadi palanisamy 1

கொரோனா தடுப்பதற்கான முயற்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் மோடி. நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி தொடரும் என்றும் தனது உரையில் கூறியுள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!