தமிழ்நாடு

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!!

‘உடல் உறுப்புகளை இறப்புக்குப்பின் கொடையளிக்க அனைவரையும் ஊக்குவிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திக் குறிப்பின் மூலம் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளார்.

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தொடர்ந்து 6 முறை முதல் இடத்தை பிடித்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் மொத்தமாக 1392 நபர்களிடமிருந்து 8245 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதயத்தைப் பொருத்தவரை பெறப்பட்ட 97 இதயங்களில் 50 இதயங்கள் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. பயன்பாட்டு சதவீதம் என்பது 52% சதவீதமாக இருக்கிறது.

தற்போது இளைஞர்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதன் காரணமாக ஏராளமானோர் தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து உடல் உறுப்புக்களை கொடையாக அளிப்பதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையும் கொண்டு வரப்பட்டது. மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புபவர்கள் தானாக பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வன்று உடல் உறுப்பு கொடை நாளையொட்டி முதல்வர் கூறியதாவது, உலக உடலுறுப்பு கொடை நாளில், உடல் உறுப்புகள் கொடை தொடர்பான தவறான கருத்துக்களை நீக்கி, நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை இறப்புக்குப்பின் கொடையளிக்க அனைவரையும் ஊக்குவிப்போம். நாம் எடுக்கும் ஒரு முடிவானது பலரது வாழ்வை புரட்டிப் போட்டுப் பெரிய மாற்றத்தை அவர் தம் வாழ்வில் நிகழ்த்தி காட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: