இந்தியா

காவல் துறையினர் மது அருந்தினால் உடனடியாக பணிநீக்கம்.. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு..

பீகார் மாநிலத்தில், காவல் துறையினர் யாராவது மது அருந்தினால், அவர்களை உடனடியாக பணிநீக்கம் ​​செய்யும்படி, அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் பாட்னாவில், காவல் துறை உயரதிகாரிகளுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான திரு.நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், காவல் துறையினர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றும், மாநிலத்தில், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் யாராவது மது அருந்தினால், அவர்களை பாரபட்சமின்றி பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Back to top button
error: Content is protected !!