இந்தியா

சி.பி.எஸ்.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்‍கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்‍கை..!

தற்போது அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்‍கப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர், 45 வயதுக்‍கு உட்பட்டவர்கள் என டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்‍கு பேட்டியளித்த முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோதே, ஒருநாள் பாதிப்பு வெறும் 8 ஆயிரத்து 500 ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போதைய பரவல் அதிதீவிரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் 45 வயதுக்‍குட்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ள திரு. அரவிந்த கெஜ்ரிவால், இளைஞர்கள் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:  18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. முன்பதிவு தேதி அறிவிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: