பொழுதுபோக்கு

செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் ஸ்டூ செய்முறை!

ரத்த திசுக்களை வலுப்படுத்தும் செட்டிநாடு மட்டன் ஸ்டூ.

தேவையான பொருள்கள்

புதிய ஆட்டின் இறைச்சி – 1 கிலோ

கருப்பு ஏலக்காய் – 2

நெய் – இரண்டு தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மிளகு – எட்டு அல்லது பத்து

பிரிஞ்சி இலைகள் – 3

இலவங்கப் பட்டை – 2

பெரிய வெங்காயம் – 4

நறுக்கிய பூண்டு – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஆட்டிறைச்சியை நன்கு கழுவிக் கொள்ளவும்.

பின்னர் ஆட்டிறைச்சி, ஒன்று இரண்டாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மிளகு, பிரிஞ்சி இலைகள், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் பிரஷர் குக்கரில் சேர்க்கவும்.

பிறகு ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி வைத்து, மிதமான தீயில் சுமார் பன்னிரண்டு நிமிடங்களுக்கு அடுப்பின் மீது வைக்கவும்.

நன்கு வெந்து விசில் வந்த மாத்திரத்தில் அடுப்பை அணைத்துக் குக்கரை இறக்கவும். பின்னர் பிரஷர் இறங்கியதும் குக்கரைத் திறந்து மட்டன் நன்றாக வெந்து, வெங்காயம் நன்கு குழைந்து கெட்டியாகச் சாறு போல மாறிவிட்டதா என்று பார்க்கவும்.

ஒருவேளை இன்னும் தண்ணீர் அதிகமாக இருந்தால், மீண்டும் அடுப்பின் மீது குறைந்த தீயில் வேகவைக்கவும்.

பின்னர் நன்கு கெட்டியானதும், நெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

இதோ சுவையான மட்டன் ஸ்டூ தயார்.

மருத்துவ நன்மைகள்

மட்டனில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. ஆகவே மட்டனை சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  குண்டு குண்டு குலோப்ஜாமூன் ரெசிபி!
Back to top button
error: