இந்தியாவிளையாட்டு

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி..

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட போது அவருடைய இருதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு அடைப்புக்கு ஸ்டென்ட் குழாய் பொருத்தி சரிபடுத்தப்பட்டது.

மருத்துவமனையில் ஐந்து நாள் சிகிச்சைக்கு பின்பு அவர் வீடு திரும்பினார். ரசிகர்கள் பலரும் அவருடைய உடல்நலம் தேறி வரவேண்டும் என பிரார்த்தனைகளை செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கு சென்ற பின்பு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார் கங்குலி. தொடர்ந்து பணிக்கு சென்று வந்த கங்குலிக்கு தற்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் கங்குலி கொல்கத்தாவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Back to top button
error: Content is protected !!