தமிழ்நாடுமாவட்டம்

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை.. சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை..!

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அனைவரும் முகக்கவசங்களை அணிவதோடு, தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். சென்னையில் இதுவரை 10 ஆயிரம் காவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 12 ஆயிரம் காவலருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்த அவர், இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: