தமிழ்நாடுமாவட்டம்

8 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே பெய்துள்ளதாக வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. இதில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டு உள்ளது.

அடுத்த 48 மணிநேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை மற்றும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். வரும் 23ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற தென்மாவட்டங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

Rain

24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Chennai rains fb 1068x561 1

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

நவம்பர் 20 முதல் 24ம் தேதி வரை தென்மேற்கு & மத்திய அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுக்கூடும். மேலும் நவம்பர் 23 முதல் 25ம் தேதி வரை தெற்கு & தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!