தமிழ்நாடு
போக்சோவில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றம்..

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்திரன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பெண் திருமணம் செய்ய வழக்கு தடையாக இருப்பதாக கூறி தாயும், மைனர் பெண்ணும் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அப்போது, “போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர இதுவே தக்க தருணம். பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.” என கூறினர். மேலும், பெண்ணின் திருமணம் பாதிக்கப்படுவதால் இந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.