உலகம்

‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்!

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் அதிகார மாற்றத்திற்கு ஒருவழியாக சம்மதித்துள்ளார்.

அதிபர் தேர்தல்:

கடந்த நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியை சேர்ந்த ஜோ பைடன்வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், ஜோ பைடன் முறைகேடுகள் செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி நீதி மன்றத்தினை நாடினார். தான் பதிவியிலிருந்து இறங்க முடியாது என்பதையும் திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்த பிரச்சினையில் முடிவெடுக்கவும், அதிகாரபூர்வமாக அதிபரை அறிவிக்கவும் வேண்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூட்டப்பட்டன.

Trump supporters climb capitol hill wall

ஆனால் அதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றதின் முன்பு வன்முறையில் ஈடுபட்டனர். இதில் டிரம்ப்பின் பங்களிப்பும் இருப்பதாக தெரிய வந்த நிலையில் சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு வன்முறை அடக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை பொறுத்தவரை ஆட்சியமைக்க 270 தேர்தல் சபை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஜோ பைடன் 306 இடங்களிலும், டிரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றது அவை உறுப்பினர்களால் உறுதி செய்யப்பட்டது. வெகு நாட்களாக ஜோ பிடனின் வெற்றியை மறுத்து வந்த டிரம்ப் ஒருவழியாக தனது நிலையை தெளிவுப்படுத்தியுள்ளார்.

skynews trump biden 5004652

டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது சோசியல் மீடியா உதவியாளர் டான் ஸ்கேவினோவின் ட்விட்டர் கணக்கின் மூலம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நான் எப்போதும் கூறுவதை போல இந்த தேர்தல் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும் கூட வரும் 20ம் தேதி முறையான அதிகார மாற்றம் நிகழும். நியாயமான ஓட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டன என்பதை உறுதி செய்ய சட்டரீதியாக போராட்டம் நடத்துவோம். அமெரிக்காவை மீண்டும் சிறப்பான தேசமாக மாற்ற நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோம்” என்று தெரிவித்திருந்தார். பதவியிலிருந்து இறங்கமாட்டேன் என அடம் பிடித்த டிரம்ப் ஒருவழியாக இறங்கி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button
error: Content is protected !!