திருவண்ணாமலையில், 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஐத்தேபாளையத்தைச் சேர்ந்த விவசாயி, தனது நிலத்தில் இருந்த வேப்ப மரத்தை அனுமதி இன்றி வெட்டி, டிராக்டர் மூலம் கொண்டு வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ், மரத்தை வெட்டி எடுத்து வந்தவர்களிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார், லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷை, திருவண்ணாமலை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh