இந்தியா

அரசு ஓய்வூதிய திட்டத்தின் குடும்ப ஓய்வூதிய விதிகள் மாற்றம் – இதோ முழு விவரங்கள்!!

மத்திய அரசு ஊழியர்கள் பெரும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான விதிகளில் தற்போது சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் இப்போது ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரின் வருமான ஊதியம் 30 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உட்பட பல வகையான சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊழியர்களுக்கென அகவிலைப்படி, பயணப்படி, மருத்துவப்படி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல நன்மைகளை அரசாங்கம் கொடுக்கிறது. இதனுடன் அரசு ஊழியர்கள் பெரும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்து போன அரசு ஊழியர்களது ஓய்வூதியத்தை அவரது குடும்பத்தினரும் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப ஓய்வூதியம் பெறும் விதிகளில் தற்போது சில மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன் படி அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் உடன் பிறந்தவர்கள் அல்லது ஊனமுற்ற குழந்தை ஆகியோர் குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆவர். மேலும் ஓய்வூதியம் பெறுபவர்களது மாத வருமானம் தகுதிபெற்ற குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருந்தால், அதாவது கடைசி ஊதியத்தில் DR உடன் சேர்த்து 30% மாக இருப்பின் அவரால் குடும்ப ஓய்வூதிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் தற்பொழுது மாற்றப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதிய புதிய விதிகளின் கீழ்,

குடும்ப ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு, மானிய நிவாரணத்துடன் (DR) மாத ஊதியம் ரூ.9,000 என இதுவரை இருந்தது. இப்போது கடைசி ஊதியத்தில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அவருடைய வருமானம் குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருக்க வேண்டும். இதனுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்காக இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் குழந்தை அல்லது உடன்பிறப்புக்கான தகுதி வருமான அளவுகோல்களை எளிதாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: