தமிழ்நாடு

சென்னை புறநகர் மின் ரயில் சேவைகளில் மாற்றம்..!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது.

அதன் விவரம் கீழ்வருமாறு: வார நாள்கள் ( திங்கள் முதல் சனி)

  • சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம் – 150 சேவைகள்
  • சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மார்க்கம் – 64 சேவைகள்
  • சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம் – 68 சேவைகள்
  • சென்னை கடற்கரை – தாம்பரம்/செங்கல்பட்டு/திருமால்பூர் மார்க்கம் – 152 சேவைகள்

என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாள்களில் இயக்கப்படும்.

11480841 train 2

ஞாயிற்றுக்கிழமைகளில்

  • சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம் – 32 சேவைகள்
  • சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மார்க்கம் – 24 சேவைகள்
  • சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம் – 12 சேவைகள்
  • சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கம் – 18 சேவைகள்

என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

குறிப்பு:

இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 4 மணிவரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

இந்தத் திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை நாளைமுதல் (ஏப்ரல் 22) அமல்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:  தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: