தமிழ்நாடுமாவட்டம்

தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசியில் லேசானது முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றும், நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட்..!
Back to top button
error: