தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் 14 முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் பரவலாக இடி மின்னல், காற்றுடன் கூடிய இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஏப்ரல் 14 முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: