
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளையும் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.