தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை அறிக்கை

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக வருகிற 2 ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாவட்டங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்றும், 3 ஆம் தேதி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலையே காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!