தமிழ்நாடு

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு பருவ காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌ மலை ஓட்டிய (தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்‌சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

13.09.2021, 14.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஓரிரு உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

15.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, ஈரோடு, கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌, வட உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

16.09.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌யஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நேற்று மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய வட கிழக்கு வங்க கடலில்‌ நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆம்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட மேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடலில்‌ நிலை கொண்டுள்ளது. இது மேலும்‌ மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து அடுத்த 12
மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌ .

வங்கக்‌கடல்‌ பகுதிகள்‌:

12.09.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

12.09.2021 முதல்‌ 14.09.2021: வடமேற்கு வங்கக்கடல்‌, மேற்குவங்கம்‌ மற்றும்‌ ஓடிசா கடலோர பகுதிகள்‌, வட ஆந்திர கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 65 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌

இதையும் படிங்க:  ஊரடங்கு நீட்டிப்பு? முதலமைச்சர் இன்று ஆலோசனை!

12.09.2021, 13.09.2021: தென்‌ கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

12.09.2021 முதல்‌ 16.09.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: