தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், வட மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இதனிடையே, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, வங்கக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், கேரள, கர்நாடகா கடலோரம் மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பெண் தற்கொலை; யூடியூபர் எஸ்கேப்..!
Back to top button
error: