வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கான தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேச கடலோரம் அருகே உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள அசானி புயலின் காரணமாக தான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பொழிவு இருந்து வருகிறது. பின்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரப்பிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்து விட்டது. இதன் காரணமாகவே தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே 11 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்து வந்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது, இதனை அடுத்து புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்றும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி மாவட்டத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் லேசான காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் நேற்றைவிட இன்று குறைவான அளவே காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh