தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெயிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்
அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!