தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழையும், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக மதுரை மேலூரில் 7 சென்டி மீட்டரும், திருபுவனம், மதுரை புலிப்பட்டியில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவானது” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றும், நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட்..!
Back to top button
error: