தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழ்நாட்டில்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்கு மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, புதுச்சேரி, கடலூர் அரியலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, உள்‌ மாவட்டங்கள்‌, தென் தமிழக மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.08.2021: கடலூர்‌, விழுப்புரம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌. திருவள்ளூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, மதுரை, சிவகங்கை, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.08.2021: சேலம்‌, தர்மபுரி, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, திருவண்ணமலை, காஞ்புரம்‌, செங்கல்பட்டு, அரியலூர்‌, பெரம்பலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌, நீலகிரி, கோவை, இண்டுக்கல்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.08.2021: சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, கரூர்‌, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.08.2021: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்இற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அவ்வப்போது கன மழையும்‌ இருக்ககூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸ்சை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருல பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அவ்வப்போது கன மழையும்‌ இருக்ககூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

20.08.2021 முதல்‌ 24.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே 60 இலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: