பொழுதுபோக்கு

நலமான வாழ்விற்கு நவதானிய சூப்!

நவதானியம் என்பது சுப நிகழ்ச்சிகள், கும்பாபிசேகம் துவங்கி, கர்ம காரியங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நவதானியம், அதுவும் முளைவிட்ட நவதானியம் என்பது உடலிற்கும் பல வகையில் பயன்படும் தெரியுமா?

நவதானியம்

நவதானியங்கள் என்பது நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம். அதில் முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கொண்டைக் கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். முளைகட்டிய உளுந்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைகட்டிய கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் மூட்டுவலி தேறும்.

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பயறுகள் – 1 கப்

வெங்காயம் – சிறிதளவு

பூண்டு – 2 பல்

சீரகம் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் (தனியா) – 1 மேசைக்கரண்டி

மிளகு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு

தேங்காய்ப் பால் – 1 கப்

தயிர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி இலை மற்றும் வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

எஞ்சியுள்ள பயறை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின்பு தேங்காய்ப் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கி எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: