வேலைவாய்ப்பு

ரூ.50,000/- ஊதியத்தில் திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

Temporary Faculty பணியிடங்களை நிரப்ப திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 18.07.2021 உடன் முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்தப்படுகிறது.

நிறுவனம் – NIT Trichy
பணியின் பெயர் – Temporary Faculty
பணியிடங்கள் – 42
கடைசி தேதி – 18.07.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Temporary Faculty பணிகளுக்கு 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

திருச்சி கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ME/ M.Tech/ PG/ PhD degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.nitt.edu/home/other/jobs/TF-2021-Advertisement.pdf

Apply Online – https://recruitment.nitt.edu/tmpfac21/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: