வேலைவாய்ப்பு

ரூ.25,000/- ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!!

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
பணியின் பெயர் – Project Associate
பணியிடங்கள் – 20
விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.07.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Project Associate பதவிக்கு 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 55% மதிப்பெண்களுடன் இயற்பியல் / வேதியியல் பாடப் பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது கூகிள் மீட் மூலம் நடைபெற உள்ளது. நேர்காணலின் தேதி மற்றும் நேரம் பற்றிய முழு விவரங்களும் சி.எஸ்.ஐ.ஆர் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003 என்ற முகவரிக்கு 28.07.2021 க்குள் அனுப்பு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-07-2021_AdvtCopy.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: