தமிழ்நாடு

பிரபல டிக்டாக் திவ்யா திடீர் கைது – போலீசார் அதிரடி!!

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்த திவ்யா எனும் பெண் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண் சமூக வலைத்தளங்களில் கார்த்தி என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தேவையில்லா பதிவுகள் மூலம் பல விமர்சனத்திற்கு ஆளாகினார். கார்த்தி என்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவருடன் என்னை சேர்த்து வையுங்கள் என்று கூறி வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பல இடங்களுக்கு சென்று இளைஞர்களுடன் செல்பி எடுத்து கொண்ட புகைப்படங்களும் தாலி கட்டி கொள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களுக்கு மாறினார். சமீபத்தில் திருநங்கைகள் மக்களை மிரட்டி பணம் கேட்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதை பார்த்த திருநங்கைகள் இதை எதிர்த்து பல வீடியோக்களை வெளியிட்டனர். அடுத்ததாக திவ்யா வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரை சென்றது.

இது தொடர்பாக டிக் டாக் சுகந்தி கடந்த மாதம் 14ம் தேதி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து சைபர் கிரைம் ஆய்வாளர்கள் விசாரித்தனர். இந்த நிலையில் திவ்யா திடீரென தலைமறைவாகினார். காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த திவ்யா கைது செய்யப்பட்டு நிலக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு – மாநில தேர்தல் ஆணையம்!!
Back to top button
error: