இந்தியா

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. பிப்., 2-ம் தேதி அட்டவணை வெளியீடு..

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், மே 4-ந்தேதி சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பான தேர்வுகள் நடைபெறும், ஜூன் 10-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும், முடிவுகள் ஜூலை 15-ந்தேதி வெளியிடப்படும் என்றார்.

மார்ச் 1-ந்தேதி முதல் எழுத்துத் தேர்வு நடைபெறும் வரை செய்முறை/பிராஜெக்ட்/உள்மதீப்பீடு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!