இந்தியாதமிழ்நாடு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து..!

இந்தியாவில் 2ம் அலை கொரோனா தாக்கம் காரணமாக நாள்தோறும் காரணம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மே மாதம் நடக்கும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கக்கோரி பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்ய சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சிபிஎஸ்இ தேர்வு மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மதிப்பெண்களை எந்தவகையில் வழங்குவது என்பது பற்றி சிபிஎஸ்இ முடிவு செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். தகுந்த சூழல் ஏற்படும்போது தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். நாடு முழுவதும் மே 4முதல் துவங்கவிருந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (07.05.2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: