இப்டியொரு ‘பாசக்கார’ அண்ணனா..! 2 மாச சம்பளத்தை சேர்த்து வச்சு தங்கைக்கு கொடுத்த ‘காஸ்ட்லி’ கிப்ட்..!

சகோதர பாசத்தை காட்டும் வகையில் தனது தங்கைக்கு அண்ணன் ஒருவர் சர்ப்ரைஸாக லேப்டாப் வாங்கிக் கொடுத்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
அஜய் என்ற இளைஞர் சிவில் எஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தங்கை ஒருவர் உள்ளார். தனது தங்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த லேப்டாப் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் ஆங்காங்கே சில இடங்களில் டேப்பால் ஒட்டுபோட்டு பயன்படுத்தி வந்துள்ளார். இதனை கவனித்த அண்ணன் அஜய், தங்கைக்கு தெரியாமல் 2 மாதங்களுக்கு மேலாக பணம் சேர்த்து புதிய லேப்டாப் ஒன்றை வாங்கியுள்ளார். அதுவும் சாதாரண லேப்டாப் கிடையாது, 1,22, 900 ரூபாய் மதிப்புள்ள MacBook Pro லேப்டாப்பை தங்கைக்கு சர்ப்ரைஸாக கொடுத்து அசத்தியுள்ளார்.
இதனை அடுத்து தனது தங்கையின் பழைய லேப்டாப் புகைப்படங்களையும், புதிதாக வாங்கிக்கொடுத்த லேப்டாப் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த இந்த பதிவு, அமோக வரவேற்பு கிடைத்ததுடன், அண்ணன் அஜயை பலரும் பாரட்டி வருகின்றனர்.
My sister’s laptop was broken so I saved money for two months and now on my way to surprise her.. ❤️❤️ pic.twitter.com/hHSm0AM9FB
— Ajay Kareer (@ajaykareer) January 4, 2021
இதுவரை அந்த போஸ்ட் 9 ஆயிரம் லைக்குகளை கடந்துள்ளது. கமெண்ட் பிரிவில் சிலர், ‘தெய்வமே! நீங்கள் எங்களுக்கு அண்ணாக பிறந்திருக்க கூடாதா?’ என சில பெண்கள் ஏக்கத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் இந்த போஸ்டை தங்களின் அண்ணன்களுக்கு Tag செய்து வருகின்றனர்.