தமிழ்நாடு

சிறப்பான தரிசு சாகுபடிக்கு ரொக்கப் பரிசு – மகளிருக்கு ரூ.1 கோடி மானியம்!!

தமிழகத்தில் நடந்து வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தரிசு நிலங்களில்‌ தோட்டக்கலைப்‌ பயிர்கள்‌ சாகுபடியில்‌ சிறந்து விளங்கும்‌ விவசாயிகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ பரிசுகள் வழங்க இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். விவசாயிகள் நலன் மற்றும் பயிர்கள் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். இயற்கை பேரழிவுகள் மற்றும் வேறு ஏதேனும் காரணங்களினால் பயிர்கள் பாதிக்கபட்டால் அரசு ஆய்வு செய்து பயிர்களுக்கான இழப்பீடு தொகையை வழங்கும். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக முன்னதாக தமிழக வேளாண்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 28ம் தேதியான இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் வேளாண்துறை அறிக்கையில் பெண்‌ விவசாயிகள்‌ காளான்‌ வளர்ப்பில்‌ ஈடுபட்டு அதிக அளவில்‌ லாபம்‌ ஈட்டவும்‌, தினசரி வருமானம்‌ பெற்றிடவும்‌ நடப்பாண்டில் ஒருவருக்கு ஒரு லட்சம் என்ற விதத்தில் 100 பேருக்கு காளான்‌ உற்பத்திக்கூடம்‌ அமைத்திட மானியம்‌ வழங்க மகளிர்‌ திட்டத்துடன்‌ இணைந்து ஒரு கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ நடப்பாண்டில் மாவட்ட அளவில்‌ சிறந்த விவசாயிகளைத் தேர்வு செய்து சான்றிதழுடன்‌ முதலாம்‌ பரிசாக ரூ.15,000-ம்‌, இரண்டாம்‌ பரிசாக ரூ.10,000-ம்‌, மூன்றாம்‌ பரிசாக ரூ.5,000-ம்‌ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டிற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: