இந்தியாதமிழ்நாடு

புதுச்சேரியில் இதுவரை ரூ.42.16 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் பறிமுதல்.. தேர்தல் அதிகாரி தகவல்..!

புதுச்சேரியில் இதுவரை 42 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.பூர்வாக கார்க் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.பூர்வாக கார்க், தேர்தல் காரணமாக புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தேர்தல் விதிமீறல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், திருமணம், மதரீதியான சடங்குகள், துக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தார்.

இதுவரையிலான சோதனையில் 42 கோடியே 12 லட்சம் மதிப்பிலான பணம், நகை, பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:  தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிடுங்க போதும்! உடல் எடையை 15 கிலோ வரை ஈஸியாக குறைக்கலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: