தமிழ்நாடு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு ஏற்றது அல்ல. இந்த சட்டங்கள் தனியாருக்கு பயன் தருவதாக தான் இருக்கும். விவசாயிகள் தனியாரைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அனைத்து மாநில விவசயிகளும் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக இந்த போராட்டம் தொடர்கிறது.

மத்திய வேளாண் துறை விவசாயிகளிடம் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் விவசாயிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கும் 7வது மாநிலம் தமிழகம் ஆகும். இதனையடுத்து எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர். மேலும் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: