பொழுதுபோக்கு

இதய நோய்கள் வராமல் தடுக்கும் கேரட்டில் மில்க் ஷேக்..!

கேரட்டைப் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இது இரத்ததில் உள்ள கொழுப்பைக் குறைத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

தேவையான பொருட்கள்:

கேரட் – 200 கிராம்
பாதாம் – 20
பால் – 2 கப்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
நாட்டுச்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கேரட்டை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும். முதலில் பாதாமை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து பின் அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பின் அதில் துருவிய கேரட், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும். பின் அடுப்பை அணைத்து நன்கு குளிர வைக்கவும். பிறகு பாலில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது பால் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

இறுதியாக மீதமுள்ள பாலை ஊற்றி ஒருமுறை அடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் பரிமாறினால் சுவையான கேரட் மில்க் ஷேக் தயார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  சின்ன வெங்காயம் பூண்டு குழம்பு செய்வது எப்படி?
Back to top button
error: