ஆன்மீகம்

நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்லலாமா?

ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது.

உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம்.

அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டு கோளைச் சொல்கிறேன் என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று.

ஆனால், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே உள்ள இடைவெளி வழியாக கர்ப்பக் கிருகத்திலுள்ள சிவனை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானது. அப்போது நந்தியின் வால் பகுதியைப் பிடித்துக் கொண்டு சில மந்திர சுலோகம் சொல்ல வேண்டும் என்று மட்டும் ஆகமத்தில் காணப்படுகிறது.

நந்தியிடம் நாம் சொல்ல வேண்டியது. (காதுகளை தொடாது).

சிவாய நம ஓம்.

சிவாய வசி ஓம்.

சிவ சிவ சிவ ஓம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இன்றைய ராசிபலன் (24-12-2021)
Back to top button
error: