ஆரோக்கியம்

சூடான நீரில் சீரகத்தை கலந்து குடிப்பதால் உடல் எடை குறையுமா?

சீரகத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கல்லீரல், நுரையீரல் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது.

சமையலில் மணமிக்க பொருளான சீரகம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில் சீரகம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சுத்தப்படுத்த உதவுகின்றது. இதனால் உடல் எடை குறைக்க சீரகம் உதவியாக இருக்கின்றது. அடிக்கடி பசி எடுக்க கூடாது என்று சிலர் மாத்திரைகளை பயன்படுத்துவது உண்டு.

ஆனால் நமது இயற்கை முறையிலே பசிக்கு ஒரு தீர்வை காணலாம். சரி வாங்க சீரகத்தின் செயல்பாட்டுமுறை மற்றும் அதனின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

நன்மைகள்:-

சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள தேவைற்ற கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.

நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு போன்றவை நம் உடலில் எளிதாக நுழைந்து விடுகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சூடான சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். அதோடு இரத்த அழுத்தம் வராமல் தடுக்கின்றது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: