ஆரோக்கியம்

அழகிற்கும் பயன்படுமாம் புளி! நம்பமுடிகிறதா உங்களால்..

புளி என்பது வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. அதுவும் சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்குமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் காணலாம்.

சருமம் பொலிவு பெற

புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

உங்களின் முகத்தில் நிறம் அதிகரிக்க வேண்டுமென்றால் புளிச்சாற்றில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

காரணம்

புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அடங்கி உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளிப்பதால், முதுமைத்தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்.

இதையும் படிங்க:  வெறும் 100 கிராம் உருளைக்கிழங்கு! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: