ஆன்மீகம்

விரதத்தின் போது பலகாரம் சாப்பிடலாமா?

புதிதாக விரதம் இருப்பவர்கள், அந்த விரத காலத்தில் எதை சாப்பிடலாம் என்று தெரியாமல் இருப்பார்கள். விரதம் கடைபிடிப்பவர்களிடம் கேட்டால்.. சாதமாக சாப்பிடக்கூடாது. ஏதாவது எளிய பலகாரம் சாப்பிடலாம் என்று சொல்வதுண்டு.

ஆனால்..

விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் ‘ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். ‘ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். ‘ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.

இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் ‘பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது. ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே இறை விரதத்தின் நோக்கமாகும்.

எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி இறைவனை நினைத்து விரதம் இருப்பதே சிறந்த விரதம் ஆகும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: