ஆரோக்கியம்

சர்க்கரை நோயாளிகள் குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிடலாமா?

சட்டி பானையில் சமைத்து வந்த போது இருந்த ஆரோக்கியம் இப்போது இல்லை. அவசரமாக நாம் வேலைகளை செய்துமுடிக்க நினைப்பதால் நோய்களும் நமக்கு அவசரமாகவே வந்து விடுகின்றது.

நாம் சுலபமான குக்கரில் சாப்பாடு வைத்து சாப்பிடுகிறோம். ஆனால் அது எவ்வளவு தீங்கு என்பதை நாம் இன்னும் உணரவில்லை. குக்கர் சாதத்தினால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்து பார்க்கலாம்.

பொதுவாக குக்கரில் சாப்பாடு செய்வது சாதாரணமான ஒன்று தான். அதனால் உடல்பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவுச்சத்து குறைந்து விடும்.

குக்கரில் சமைக்கும்போது அந்த சத்துகள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும். மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதனால் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

அதேபோன்று சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உருவாக்கும் அபாயமும் இதில் இருக்கிறது. மேலும் நார்சத்து நிறைந்த கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக வேகமாக தயாரான சாப்பாட்டை இரண்டு மடங்கு எடுத்து கொண்டால் மட்டுமே வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவை திணிக்க திணிக்க பிரச்னைகளும் அதிகமாகும். உடல் எடை கணிசமாக அதிகரிக்கும். அதோடு சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவையும் நம்மை தாக்கும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தூக்கி ஏறியும் புளியங்கொட்டையில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
Back to top button
error: