அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்.. பெரும் லாபத்தில் பங்குச்சந்தைகள்!
அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் பெரும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் மீண்டும் 80 ஆயிரத்தை எட்டியது. நிஃப்டியும் 24,400 அளவை கடந்தது. சென்செக்ஸ் 901.50 புள்ளிகள் உயர்வுடன் 80,378 இல் நிறைவடைந்தது. நிஃப்டியும் 305 புள்ளிகள் அதிகரித்து 24,518ல் நிலைத்தது.
ஐடி, டெக், ரியாலிட்டி, ஆயில் மற்றும் கேஸ் பங்குகள் தொடர்ந்து பெரும் லாபத்தை ஈட்டின. டிசிஎஸ் 3.88 சதவீதமும், எச்சிஎல் டெக்னாலஜிஸ் 3.82 சதவீதமும், டெக் மஹிந்திரா 3.77 சதவீதமும், இன்ஃபோசிஸ் 3.77 சதவீதமும் அதிகரித்தன.