கடும் சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்தது..!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் நஷ்டத்தில் முடிவடைந்தன. அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு ஆகியவை பங்குச்சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுமின்றி ஐடி பங்குகளின் விற்பனை அழுத்தமும் சந்தைகளை பாதித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்து 79,043 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 360 புள்ளிகள் இழந்து 23,914 புள்ளிகளில் நிலைத்தது.
இன்ஃபோசிஸ் (-3.46%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-3.36%), பஜாஜ் ஃபைனான்ஸ் (-2.84%), அதானி போர்ட்ஸ் (-2.73%), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை பிஎஸ்இ சென்செக்ஸில் அதிக நஷ்டம் அடைந்தன.