இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஓரளவு ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்வுடன் 81,086ல் நிறைவடைந்தது. நிஃப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 24,823 புள்ளிகளில் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ்:-
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
டாடா மோட்டார்ஸ் (1.53%), சன் பார்மா (1.44%), பார்தி ஏர்டெல் (1.33%), ஐசிஐசிஐ வங்கி (1.05%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (0.97%).
அதிகம் நஷ்டம் அடைந்தவர்கள்:
டெக் மஹிந்திரா (-1.17%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-0.98%), டைட்டன் (-0.97%), இன்ஃபோசிஸ் (-0.94%), டிசிஎஸ் (-0.80%)