20 சதவீதம் கட்டண உயர்வு.. வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய Swiggy, Zomato!
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato ஆகியவை தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளன.
இந்த பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வு முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற அதிகம் தேவை உள்ள நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ப்ளாட்ஃபார்ம் கட்டணம் ஒரு ஆர்டருக்கு ரூ.7 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது பிளாட்ஃபார்ம் கட்டணம் ஒரு ஆர்டருக்கு ரூ.6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களிலும் இந்த கட்டணம் விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 இல், இந்த வகையான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 2 ரூபாயாக இருந்த கட்டணம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், Zomato இந்த கட்டணத்தை 25 சதவீதம் அதிகரித்து ரூ.5 ஆக இருந்தது. தற்போது, இந்த 20 சதவீத கட்டண உயர்வு மூலம் இந்நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ.1.25 முதல் 1.5 கோடி வரை அதிக லாபம் ஈட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.