இந்திய பங்குச்சந்தை ஓரளவு ஏற்றத்துடன் முடிந்தது. அமெரிக்க பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் கொள்கை கூட்டத்தை அடுத்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். இதன் மூலம், குறியீடுகள் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 83,079 ஆகவும், நிஃப்டி 34 புள்ளிகள் அதிகரித்து 25,418 ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸ் 30 பங்குகளில், பார்தி ஏர்டெல், என்டிபிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல்&டி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹெச்யுஎல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமென்ட், சன் பார்மா, எச்சிஎல், டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதே சமயம் பவர் கிரிட், ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ், மாருதி சுஸுகி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.