இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஜூலை 12) பெரும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 80,519 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 186 புள்ளிகள் உயர்ந்து 24,502 புள்ளிகளில் நிலைத்தது.
ஐடி பங்குகளால் சந்தைகள் ஏற்றம் கண்டன. எதிர்பார்த்ததை விட சிறந்த லாபம் என்ற டிசிஎஸ் அறிவிப்பு முதலீட்டாளர்களின் உணர்வை உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான நமது ரூபாயின் மதிப்பு ரூ.83.51 ஆக உள்ளது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
டிசிஎஸ் (6.68%), இன்ஃபோசிஸ் (3.57%), எச்சிஎல் டெக்னாலஜிஸ் (3.20%), டெக் மஹிந்திரா (3.19%), ஆக்சிஸ் வங்கி (1.62%).
அதிகம் நஷ்டம் அடைந்தவர்கள்:
மாருதி (-1.00%), ஏசியன் பெயிண்ட் (-0.79%), கோடக் வங்கி (-0.77%), ஐசிஐசிஐ வங்கி (-0.56%), டைட்டன் (-0.55%).